பிரபல இசைக்குழுவான லஷ்மன் ஸ்ருதி நிறுவனத்தின் உரிமையாளர் ராமனின் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் இறங்கல் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lakshman-shruthi.jpg)
லஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ராமன் எதற்காக தற்கொலை செய்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் 24ஆம் தேதி இசைக்கச்சேரி நடத்தியுள்ளார் ராமன். தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்த அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய நிலையில் வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன் ட்விட்டரில், “மறைந்த ராமின் குடும்பத்தாருக்கும் இணைபிரிந்து தவிக்கும் அவர் சகோதரர் திரு.லக்ஷ்மணனுக்கும், லக்ஷ்மண்-ஸ்ருதி இசைக்குழுவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)